மெக்சிகோ சிட்டி: உலகில் ஏற்பட்டுள்ள போர்களை தடுக்க பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டாரஸ் தலைமையில் உயர்மட்ட ஆணையம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. சீனா, தைவான் மீது போர் நடத்த ஆயத்தமாகி வருகிறது.இந்நிலையில் இணையதள பத்திரிகைக்கு மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவெல் லோப்ஸ் ஓப்ராடர் அளித்துள்ள பேட்டியில் கூறியது,அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலகில் போர்களை தடுக்க , பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டாரஸ் ஆகியோர் கொண்ட உயர்மட்ட ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.

உலகெங்கிலும் போர்களை நிறுத்துவதற்கான முன்மொழிவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு போர்நிறுத்தம் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதும் இந்த ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக எனது பரிந்துரையை வலியுறுத்தி ஐ.நா.-வுக்கு கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment