பொதுமக்களை கவரும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள்-பெரியார் படம் எங்கே கேள்விகளும் கண்டனங்களும் !
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (15ம் தேதி) சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நகர், கிராமப்புறங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடியேற்றப்படுகிறது. 75-வது சுதந்திர தினம் என்பதால், இந்திய நாட்டின் பெருமையை உணத்தும் வகையில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் மூவர்ண கொடியேற்றப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்திய சுதந்திரம் அடைவதற்கு காரணமான தியாகிகள் குறித்து, தேசபற்று மிக்க பல எதியாகிகளின் புகைபடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நகராட்சிக்குட்பட்ட பாலகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே, பல்வேறு சுதந்திர தியாகிகளின் புகைப்படத்தை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில், காந்தியடிகள் மற்றும் காமராஜர், நேரு, பாரதியார், கப்பலோட்டிய தமிழன், தில்லை வள்ளிநாயகம், சுபாஷ் சந்திரபோஷ், கொடிகாத்த குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட பல்வேறு சுதந்திர தியாகிகள் புகைபடங்கள் அடங்கியுள்ளது. இந்த புகை படங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெரியாரும் அம்பேத்காரும் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் ஆனால் அவர்களை சுதந்திரதினவிழாக்களில் அடையாளம் காட்டாமல் மறைக்கப்படுகிறது. காரணம் அவர்கள் சமூகநீதி பேசியதற்காக இந்த நிலைப்பாடு உருவாகியுள்ளன, அவர்கள் சாதி வெறி மத வெறி கும்பலோடு இணைந்து செயல்பட்டிருந்தால் என்னவோ சுசுதந்திர தின விழாக்களில் சேர்த்திருப்பார்கள் போல என்று திராவிட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment