உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு யு லலித் நியமனம்

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி உதய் உமேஷ் லலித்(யுயு லலித்) நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆக.,26 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித்தை நியமிக்கும்படி சட்ட அமைச்சகத்திற்கு ரமணா பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஆக.,10) 49வது தலைமை நீதிபதியாக லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லலித் ஆக., 27 முதல் பொறுப்பேற்கிறார். புதிய தலைமை நீதிபதிக்கு, ரமணா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments