ஆத்தூர்: கல்லூரி பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்தில் சிக்கி, கல்லூரி மாணவிகள் உள்பட15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நத்தக்கரை வழியாக, கள்ளக்குறிச்சியில் இருந்து, ஆத்தூர், சேலம் நோக்கி அரவிந்த் என்ற தனியார் பஸ் வந்து கொண்டிருக்கிறது. அப்போது அவ்வழியாக வந்த தேவியாக்குறிச்சியில் உள்ள பாரதியார் கல்லூரி என்ற தனியார் கல்லூரி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பஸ்சின் முன்புறம் அதிக அளவில் சேதமடைந்தது. இதனால் கல்லூரி மாணவிகள் உள்பட15 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment