"பழுத்த மரத்தில் கல் விழும்" அறிவாலயத்தில் அமைச்சர் !


தற்போது  ஒன்றிய செயலாளர்கள் தேர்தலை நடத்தி வைக்க தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு யு.எஸ்.டி.சீனிவாசனும், மேற்கு மாவட்டத்திற்கு வழக்கறிஞர் கண்ணதாசனும் தேர்தல் அதிகாரிகளாக ஜூன் 14ந் தேதி தருமபுரி வந்து சேர்ந்தனர் அதியமான் பேலஸ்ல தங்க வைக்கப்பட்டனர்.

ஜூன் 15ந் தேதி ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் மனு வாங்கினார் 16, 17, 18 மூன்று நாட்களும் போட்டியாளர்களை அழைத்து சமரசம் பேசி ஒருவரை தேர்வு செய்து ஒன்றிய செயலாளராக டிக்ளர் பண்ண வேண்டும். 

கிழக்கு மாவட்டத்தில தடங்கம் சுப்பிரமணியும் தேர்தல் அதிகாரி சீனுவாசனும் கூட்டணி அமைக்க, மேற்கு மாவட்டத்தில் இன்பசேகரனும் தேர்தல் அதிகாரி கண்ணதாசனும் கூட்டணி அமைக்க, மாவட்ட பொறுப்பு மந்திரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேடிக்கை பார்க்க, ஒன்றிய செயலாளர் தேர்தலில் ஜனநாயகம் பணத்தால் தோற்கடிக்கப்பட்டது தலா பதினைந்து லட்சம், இருபது லட்சம், முப்பது லட்சம் இப்படி ஏலத்தில் விடப்பட்டது ஒன்றிய செயலாளர் பதவிகள்! பணம் கொடுத்தவர்கள் பதவியை உறுதி செய்து கொண்டனர்.


கேட்ட பணத்தை கொடுத்து ஒன்றிய செயலாளர்கள் பதவியை ஏலம் எடுக்க முடியாதவர்கள், புகார் மனுக்களோடு அறிவாலயம் சென்றதாக ஒரு கட்டுக்கதைகள்  விடப்பட்டிருந்தன.  இது பற்றி நமது செய்தியாளர் கீ மா முருகன் அவர்கள் தலைமை செயலகத்தில் விசாரித்தபோது அப்படி எந்த ஒரு நபர்களும் வரவில்லை. தனக்கு பொறுப்புகள் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டு நட்பு வட்டாரத்திலோ குடும்ப உறவுகளிலோ சொல்லும்போது  அடுத்த வீட்டு சட்டியில் என்ன இருக்கிறது என்று எப்படி ஒரு நாய் நாக்கை விடுமோ  அப்படி ஒன்றியத்தில் இருக்கும் மதவாத கட்சிகளும்  தர்மபுரியில் உள்ள சாதி கட்சிகளும் காதில் கேட்டதை வைத்து  அரசியல் போட்டிக்காக திமுகாவை  பிளவுபடுத்தும் நோக்கில் ஆங்காங்கே புரளி பேசி கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது,  என்பது பற்றி தலைமை நன்றாக உணர்ந்துவிட்டது. தர்மபுரியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தலைமை கண்காணித்து வருகிறது தர்மபுரி மட்டுமல்ல விழுப்புரம், கன்னியாகுமாரி, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, போன்றபகுதிகளிலும் ஒவ்வொரு பொறுப்பாளர்களின் மீது வதந்திகள் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் அதனை ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் ஒன்றும் இருக்காது. "பழுத்த மரம்தான் கல்லடி படும்" என்ற பழமொழி போல நல்ல செயல்பாட்டாளர்களின் மீது புரளிகள் வருவது வழக்கம்தானே..! என அறிவாலயத்தில் இருந்த அமைச்சர் நமது நிருபர்களிடம்  பேசியுள்ளதை கண்டு அங்கிருந்த திமுக தொண்டர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். அப்படி என்றால் தர்மபுரியில் தற்போது உள்ள பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் தலைமையில் ஸ்ட்ராங்காக நிலைத்துள்ளது.  

Comments