ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்தபின் ஒரு பேச்சு "ஸ்டாலின் எம்மாத்திரம்" - இதுதான் திராவிட மாடல்'': பழனிசாமி ‛பாய்ச்சல்'
சென்னை: திமுக.,வை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு. இது தான் திராவிட மாடலா என அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை பாரிமுனையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழனிசாமி பேசியதாவது: விலைவாசி, மின் கட்டணம், சொத்து வரி என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா சாதாரணமாக பொறுப்புக்கு வந்துவிடவில்லை. பல்வேறு இன்னல்களை அளித்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுக.,வை அழிக்க கருணாநிதி அதிமுக.,வை சாதாரணமாக நினைத்துவிட்டீர்களா? தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்த கட்சி இது. எந்தவொரு இயக்கத்திற்கு வலிமை இருக்கிறதோ, அது தொண்டர்களாலும் மக்களாலும் கிடைக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தபோது 3 மாதத்தில், 5 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஆரூடம் கூறினார்கள். ஆனால் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுகஅகு நான்கரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்தோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை துணிவோடு எதிர்கொள்வோம். விபத்திலே வந்த ஆட்சி திமுக ஆட்சி. ஏமாந்து ஓட்டு போட்டு விட்டதாக மக்கள் கூறுகின்றனர். காற்றுக்கு தடைபோடமுடியாது; அதுபோல அதிமுக.,வின் வள்ர்ச்சியை ஒருபோதும் தடைபோட முடியாது.
ஈவு இரக்கம்
Comments
Post a Comment