சென்னை : 'சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகள், இணையதளத்தில் சரிவர வெளியிடாததுகுறித்து, சென்னை, பெசன்ட் நகரை சேர்ந்த தர்மேஷ் ஷாஎன்பவர், 2021-ல் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:தேவையான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்கவும், அதை செயல்படவைக்கவும், உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கிஉள்ளது. இந்த வழிகாட்டுதல்களை உள்ளாட்சி அமைப்புகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வின் அதிகார வரம்புக்குள் வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும்... 'ஆன்லைன்' தொடர் உமிழ்வு கண்காணிப்பு அமைப்பான ஓ.சி.இ.எம்.எஸ்., நிறுவி, தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காற்று மாசுபாட்டை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அதன்படி, இம்மாநிலங்கள் அந்த அமைப்பை ஏற்படுத்தி, மாசுபாடு பற்றிய தகவல்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தெரிய வருகிறது. ஆந்திராவில் இதற்காக 'பர்யவரன்' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.மாநில வாரியாக ஓ.சி.இ.எம்.எஸ்., தரவுகளை காண்பதற்கான இணைப்புகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன் இணையதளத்தில் கொடுத்துள்ளதாக, அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
அதை செயல்படுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரி யம், மூன்று மாதங்கள் அவகாசம் கோரியிருந்தது. ஆனால், ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. மாசுபாடு பற்றிய தரவுகளை இணைதளத்தில் புதுப்பிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment