பாயும் தோட்டாவைத் தடுக்கும் 'கெவ்லார்' இழைகள், மனிதன் படைத்ததிலேயே உறுதியான செயற்கையான பொருள். தற்போது, அதற்கு இணையான இயற்கை பொருளை விஞ்ஞானிகள் கடல் சிப்பிகளின் பற்களில் கண்டடைந்துள்ளனர்.
பாறைகளின் மேல் உயிர்வாழும் சிப்பிகளின் ஓட்டினைவிட, பாசிகளை சுரண்ட அவை பயன்படுத்தும் பற்கள், உறுதியானவை. எஃகு மற்றும் சிலந்தி வலையினுடையதைவிட மும்மடங்கு பலம் மிக்கவை. அமெரிக்காவிலுள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிப்பியின் பற்களை அண்மையில் ஆய்வகத்தில் தயாரித்துள்ளனர்.
ஒரு கண்ணாடி மீது இரும்பு ஆக்சைடு, சின்டின் என்ற பாலிமர் மற்றும் சீரம் ஆகியவற்றை தோய்த்து வைத்தனர். இவை வினை புரிந்து, சிப்பியின் பற்களில் இருக்கும் பொருளாக உருமாறின.கெவ்லார் போன்ற செயற்கைப்பொருளை உருவாக்க நிறைய செலவாகும். மூலப்பொருள்களும் அதிகம். ஆனால், செயற்கையான சிப்பிப் பல்லை உருவாக்க, அதிக செலவோ, பொருள் விரயமோ ஆவதில்லை.
Comments
Post a Comment