கரூர் : ஏற்றுமதி அதிகரிப்பு, ஜி.எஸ்.டி., போன்ற பல காரணங்களால், தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வரும் போது, அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து, 60 சதவீதமும், ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற பகுதியில் இருந்து, 30 சதவீதம் நெல் உற்பத்தியாகிறது. மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது.ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும், அரிசிக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவுள்ளதால், அரிசி விலை உயர துவங்கியுள்ளது.
இதன்படி, கிலோ, 43 முதல், 47 ரூபாய் வரை விற்பனையான பழைய பொன்னி அரிசி, 3 ரூபாய் உயர்த்து, 46 முதல், 50 ரூபாய்; புதிய பொன்னி அரிசி கிலோ, 35 முதல், 39 ரூபாயிலிருந்து, 36 முதல், 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment