சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார். இதனை கண்டித்து சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆதரவு அ.தி.மு.க.வினரிடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, சட்டம்,ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அ.தி.மு.க.,வின் இருதரப்பு தலைவர்கள், கட்சி அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ள என முடிவு செய்ய இரு தரப்பினரும் வரும் 25-ல் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்க கூடாது, அங்கீகாரமும் தரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது குறித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள நிலையில், ஒபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் பதில் மனு அளித்துள்ளார்.
Comments
Post a Comment