கோவை : கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து, கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது: கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. பன்முக பணியாளர்- 2, மருத்துவ உதவியாளர்- 4, பன்முக சுகாதார பணியாளர்கள்- 8, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்- 2, கதிரியக்கவியல் துறை நிபுணர்- 2 என, 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
Comments
Post a Comment