சித்ரவதை மரணங்களை தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.


தேசிய குற்றப் புலனாய்வுக்கூடம் அறிக்கையின்படி 2001-2020 வரை இந்தியாவில் 1888 சித்ரவதை மரணங்கள் ஏற்பட்டுள்ளது.அதில் காவல்துறையினர் 893 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். சித்ரவதை மரணங்களை தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.



புலனாய்வில் அறிவியல்பூர்வமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடய அறிவியல் மூலம் புலன் விசாரணை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். குற்றவாளிகள் தொடர் குற்றங்களை ஈடுபடுவதை தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.ஜி.பி.,தெரிவித்துள்ள 41 வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால் போலீஸ் ஸ்டேஷனில் சித்ரவதை மரணங்களை தடுக்கலாம். 2020 புள்ளிவிபரப்படி 94 சித்ரவதை மரணத்தில் 31 தற்கொலைகளும் அடங்கும். ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தற்கொலைகளை தடுக்கலாம், என்றார்.சித்ரவதை மரணங்களை தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ஆர்.காந்தி பேசினார்.


தமிழக காவல்துறை மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பு சார்பில் போலீஸ் சித்ரவதையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரையில் நடந்தது. தமிழக டி.ஜி.பி.,சைலேந்திர பாபு துவக்கி வைத்தார்.

மதுரை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவி , போலீஸ் சித்ரவதை தொடர்பாக நீதித்துறையின் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.சித்ரவதையால் ஏற்படும் மனித உரிமை மீறல் குறித்து வழக்கறிஞர் ஆர்.காந்தி பேசியதாவது:ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறும் போலீஸ் சித்ரவதையால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

Comments