பாலியல் மூடநம்பிக்கைகளும் உண்மைகளும்..!

பாலியல் நோய் பரவல் குறித்து பல வித மூட நம்பிக்கைகள் நம்மிடையே உலா வந்துகொண்டு இருக்கின்றன. மூடநம்பிக்கைகள் குறித்தும் உண்மைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

மூட நம்பிக்கை 1

வாய்வழி உறவால் பாலியல் நோய்கள் பரவாது.

உண்மை

பாதுகாப்பற்ற ஆண்/பெண் வாய்வழிப் உறவு மூலமாக பாலியல் நோய்கள் பரவும். இதனைத் தடுக்க ஆணுறை பயன்படுத்துவது அவசியம்.

மூட நம்பிக்கை 2


இரண்டு ஆணுறைகள் பயன்படுத்தினால் பாலியல் நோய் பரவாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

உண்மை

லாடெக்ஸ் எனப்படும் மெல்லிய ரப்பரால் தயாரிக்கப்பட்டது ஆணுறை. ஒரே நேரத்தில் இரு ஆணுறைகளை அணிந்து உறவுகொண்டால், அப்போது ஏற்படும் அழுத்தம், உராய்வு காரணமாக இரண்டுமே கிழிந்து பாலியல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.


மூட நம்பிக்கை 3

ஒரு பெண் தன் வாழ்நாளில் முதன்முதலில் உறவில் ஈடுபடும்போது கன்னித்திரை கிழியும்.

உண்மை

தற்போதைய காலத்தில் பெண்கள் பலவித விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வது, நடனமாடுவது, ஜாகிங் செல்வது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே கன்னித்திரை முதல் உறவின்போதுதான் கிழியவேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி கால்கள் அகற்றப்படும்போதே கன்னித்திரை கிழிந்து ரத்தம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

மூட நம்பிக்கை 4
ஆசனவாய் புணர்ச்சி பாலியல் நோய்களில் இருந்து தப்பிக்க உதவும்.
உண்மை
உறவு முறைகளில் மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுவது பாதுகாப்பற்ற ஆசன வாய்ப் புணர்ச்சி. மத்திய தரைகடல் நாடுகள் சிலவற்றில் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஆணுறை அணியாமல் இதில் ஈடுபட்டால் பாலியல் நோய்கள் மட்டுமல்லால் பலவித ஒவ்வமைகளும் பரவ வாய்ப்புள்ளது.
மூட நம்பிக்கை 5
உறவுகொண்ட பின்னர் பெண் சிறுநீர் கழித்தால் கர்ப்பத்தை தவிர்க்கலாம்.
உண்மை
ஆணின் விந்தணுக்கள் கருப்பை வாயில் அதிகவேகமாக நீந்தும் திறன் பெற்றவை. விநாடிக்கும் குறைவான நேரத்தில் இவை கருமுட்டையை சென்றடைந்துவிடும். பெண்ணில் கருப்பையில் 5 நாட்கள்வரை உயிர்ப்புடன் இருக்கும். எனவே உறவு முடிந்ததும் பெண் சிறுநீர் கழித்தால் இவை சிறுநீருடன் சேர்ந்து வெளியே வர வாய்ப்பில்லை. 
மூட நம்பிக்கை 6

வாய்வழி மாத்திரைகள் கருத்தடைக்கு சிறந்தது.
உண்மை
அடிக்கடி கருத்தடைக்கு வாய்வழி மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே இதனை அதிகமாகப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. உறவு முடிந்து 72 மணி நேரத்துக்குள் மாத்திரை உட்கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல் கரு உருவாக வாய்ப்பு உள்ளது.

Comments