மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோரிக்கை - "பொதுக்கழிவறைகள், பழுதடைந்த போர்க்குழாய்களை" சரி செய்து தரக்கோரி..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 15.06.2022 அன்று
குமாரபாளையம் நகராட்சி 3வது வார்டு கிழக்கு காவேரிநகர் வாட்டர் டேங்க் பின்புறம் மக்கள் அதிகம் குடியிருப்பு உள்ள பகுதியில் பல வருடமாக தெருவிளக்கு இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தாங்கள் அந்த இடத்தினை ஆய்வு செய்து தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதி,நகராட்சிக்கு சார்ந்த பொதுக்கழிவறைகள்,பழுதடைந்த போர்க்குழாய்களை சரி செய்து தரக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகளிரணி நகர அமைப்பாளர் சித்ராபாபு, மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் அவர்களின் தலைமையில் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
வட்ட செயலாளர் யோகராஜ்,
24வது வார்டு செயலாளர் வரதராஜ்,
17வது வார்டு மகளிர் அணி செயலாளர் விமலாவேணி,
15வது வார்டு செயலாளர் மனோகரன், துணைச்செயலாளர் மகுடேஸ்வரன் பள்ளிப்பாளையம் ஒன்றியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment