எரிபொருள் விலை தொடர்பாக விவாதித்திடுக... நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!! ஆளுநரை திரும்பப் பெறுக
இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார். மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்தார். கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆளுநர் தவறுவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் திமுக குழு தலைவர் திருச்சி சிவா கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்களை ஆளுநர் குடியரசு தலைவர் ஏற்காத காரணத்தால் அவை முடங்கியுள்ளன. நீட் விலக்கு விவகாரத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். சட்டமன்றங்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கேடுவை நிர்ணயிக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்தார்.
Comments
Post a Comment