சிவாகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய கதையை தளபதிக்கு கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் நெல்சன் என்று மதுரை விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றை பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்ய அதில் இருக்கும் மக்களை காப்பாற்ற வீரராகவன் எடுக்கும் முயற்சிகள் தான் பீஸ்ட் படத்தின் கதை என டிரைலர் சொல்லிய நிலையில், படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம், தியேட்டர்களில் டிஜே மற்றும் பட்டாசு வெடித்து விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பீஸ்ட் படத்தை பார்த்து வருகின்றனர்.
 படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் பெரும் யாமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவாகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய கதையை தளபதிக்கு கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் நெல்சன் என்று மதுரை விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Comments