இன்று இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பாக அமலாக்குத்துறையினர் சம்மன் அனுப்பினால் ஆஜராக தயார் நிலையில் உள்ளேன் என்று தர்மபுரியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தர்மபுரியில் அமமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ள தர்மபுரிக்கு நேற்று வருகை தந்தார். நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமமுக & அதிமுக இணைப்பிற்கான சாத்தியக்கூறு ஒன்றும் தெரியவில்லை. அமமுக பொருத்தவரை அம்மாவின் வழியில் ஆட்சி அமைப்பது தான் எங்களுடைய ஒரே குறிக்கோளாக, லட்சியமாக செயல்பட்டு வருகிறோம். உண்மையான அம்மாவின் ஆட்சியை நாங்கள் உருவாக்குவோம். அமமுகவில் இருந்து சென்றவர்களால் எங்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை. எங்களிடம் தொண்டர்கள் உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் நான் ஆஜர் ஆக வேண்டும் என்று அமலாக்குத்துறை மூலம் சம்மன் வந்தால் நான் ஆஜராகி சந்திப்பேன். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை மத்திய & மாநில அரசுகள் இணைந்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்றம், இறக்கத்துடன் இந்தியாவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இச்செயல் இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அப்படித்தான் உயர்த்த வேண்டும் என்றால் மக்கள் மீது சுமை இல்லாத வகையில் நிறைவேற்ற வேண்டும். முதல்வரின் துபாய் பயணம் காலப்போக்கில் தான் உண்மை தெரியவரும்.திமுகவின் பத்து மாத ஆட்சி என்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் ஆட்சியாக மக்களை திசை திருப்பும் ஆட்சியாக உள்ளது கொரான பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் படிப்படியாக மக்கள் முன்னேற்றம் கானும் சூழலில் சொத்துவரி உயர்த்தியுள்ளது சொத்தையே பறிக்கும் செயலாக உள்ளது.உடனடியாக சொத்துவரி உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்றார். மேலும், சசிகலாவின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதலளித்த டிடிவி தினகரன், எனக்கு சித்தியாக இருந்தாலும் பயணம் குறித்த அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். பேட்டியின்போது தர்மபுரி மாவட்ட அமமுக செயலாளர் டிகே ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர் ஆர்ஆர் முருகன், சேலம் மாவட்ட செயலாளர் எஸ்கே செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment