மதுரை மாவட்டம் மாலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிருவெற்றி அய்யனார் கோவிலில் புதிதாக நிறுவப்பட்டுள்ள. ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பணசாமி கும்பாபிஷேகம்*
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மாலைப்பட்டி கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதிருவெற்றி அய்யனார் திருக்கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பணசாமி சுவாமிக்கு மஹா அஷ்டபந்தனம் கும்பாபிஷேகம் மேளதாளங்களோடு வேத மந்திரங்கள் முழங்க நொண்டிச்சாமி பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனிதநீரைக் கொண்டு ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபராதனைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி முருகன் உட்பட ஊர் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments
Post a Comment