திருப்போரூர் ஊராட்சி மன்றம் சார்பில் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் இதயவர்மன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இதில் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக ஒன்றிய பெருந்தலைவருமான எஸ்ஆர்எல் இதயவர்மன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் ஆகியவைகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அன்புசெழியன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் வாசுதேவன். தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், கேளம்பாக்கம் கிளை கழக செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் பிரகாஷ்.

Comments