பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கப்பட்டு இன்றுடன் 41 வருடம் முடிந்து 42வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, தர்மபுரி நகரத்தில் பாரதிபுரம் 60அடி ரோடு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம், மற்றும் புரோக்கர் அலுவலகம் ஆகிய இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியின் 42வது துவக்க விழாவையொட்டி டெல்லியில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்களின் சிறப்புரை, கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் K.S.நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். மேலும் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ் மற்றும் பிரவீன் மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment