மதுரை மாவட்டத்தில் உள்ள கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் தோண்டப்பட்ட குழியில் மூன்று பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மூன்று குழிகள், அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தலா ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அகரத்தில் தோண்டப்பட்ட குழியில் அருகருகே 3 பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கொந்தகையில் சிறிய முதுமக்கள் தாழி உள்பட 12 தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து பானை ஓடுகள், சதுர வடிவிலான செங்கற்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன
Comments
Post a Comment