திமுக வேட்பாளர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பா ! மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் பொறுப்பிலிருந்து நீக்கம்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வக்கீல் மகேஷ் வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார். துணை மேயர் தேர்தலில் மேரி பிரின்சி வெற்றி பெற்றார்.*

*மேயர் மற்றும் துணை மேயர் பதவியை திமுக கைப்பற்றிய நிலையில்  குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் நேற்று இரவு திடீரென பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மேயர் மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*

*மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றி இருந்த நிலையில்  வக்கீல் மகேஷ் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்று இருந்தது.*

*இந்த நிலையில் திடீரென பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக மீனாதேவ் களமிறக்கப்பட்டார். இதனால் மேயர் பதவியை பிடிக்க தி.மு.க.வுடன் பாஜக மல்லு கட்டியது. இதில் தி.மு.க. மேயர் வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாரதிய ஜனதாவை சேர்ந்த மீனாதேவ்  24 வாக்குகளை பெற்றார்.*

*பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் 18 கவுன்சிலர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலை யில் 24 வாக்குகள் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியது. தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் மீனாதேவிற்கு வாக்களித்து இருப்பது தெரியவந்தது.*

*துணை மேயர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டி...

வேட்பாளராக தி.மு.க. கவுன்சிலர் ராமகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். அவரை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சுனில்குமார் முன்மொழிந்தார். துணை மேயர் தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கு 24 வாக்குகள் கிடைத்தது.*

*மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட மீனாதேவ்வுக்கும் 

துணை மேயர் போட்டி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ராமகிருஷ்ணனுக்கும் 24 வாக்குகள் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குளச்சல் நகராட்சியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து  தி.மு.க. வேட்பாளர் நசீர் வெற்றி பெற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

*மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் சுரேஷ் ராஜன் மீது ஒரு சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தி.மு.க. கட்சி தலைமைக்கு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

*சுரேஷ்ராஜன் ஏற்கனவே கடந்த முறை நாகர்கோவில் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.*

*இதற்கு முன்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றபோது சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். குமரி மாவட்ட தி.மு.க. செயலாளராக சுமார் 20 ஆண்டுகளாக சுரேஷ்ராஜன் பணியாற்றி உள்ளார். தி.மு.க. வின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சுரேஷ்ராஜன் திடீரென நீக்கப்பட்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என திமுக வாட்ஸ்அப் குழுவில் வைரலாகி வருகிறது.

Comments