புதுடில்லி: உலகளவில், பூமியை காக்கும் நோக்கத்துடன் கடைபிடிக்கப்படும், 'எர்த் அவர்' முன்னிட்டு, இன்றிரவு, ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் உலகளவில், 'எர்த் அவர்' மார்ச் மாதம், கடைசி சனிக்கிழமை கடைபிடிப்பது வழக்கம். முதன் முதலாக, 2007ல் சிட்னி நகரில் உருவானது. 2009 முதல் இந்தியாவும், இந்த விழிப்புணர்வு திட்டத்தில் பங்கேற்று வருகிறது. உலக நாடுகளில் பரவியுள்ள நிலையில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
இதையடுத்து, இன்று (மார்ச்.26) இரவு, 8:30 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் இத்திட்டம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, இன்று, உலகளவில் மின்சாரத்தை ஒரு மணி நேரம் சேமிப்பதால் ஏற்படும் பயன்பாடு குறித்து விளக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய பகுதிகளாக கருதப்படும் ராஷ்டிரபதி பவன், கேட்வே ஆப் இந்தியா, இந்தியா கேட், ஹவுரா பிரிட்ஜ், விக்டோரியா மெம்மோரியல் போன்ற இடங்களிலும், 'எர்த் அவர்' விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment