Skip to main content

அண்ணாமலை நஷ்ட ஈடாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் ! திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி

முதல்வர் துபாய் பயணம் குறித்து அவதூறு; அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்


முதல்வரின் துபாய் பயணம்

முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாகவும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வக்கீல் நோட்டீஸ்
அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த பயணம் குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி அவருக்கு திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி அனுப்பிய நோட்டீசில் கூறியுள்ளதாவது:-

முதல்வர், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022 ல் கலந்து கொண்டதை கொச்சைபடுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளீர்கள்.
நஷ்ட ஈடு ரூ.100 கோடி

Comments