போதைப்பொருளால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள் - மாணவர்களுக்கு அ பள்ளிப்பட்டி காவல் துறையினர் விழிப்புணவு ஏற்படுத்தினர்.

 
அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிகாரப்பட்டி கிராமத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி, அரூர் உட்கோட்ட துணை  காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில்,கோட்டப்பட்டி காவல் வட்டம் ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வையில்  அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவபெருமாள் மற்றும் சிறப்புகாவல் உதவி ஆய்வாளர் திரு. ஜெகதீசன் ஆகியோர்கள் அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு குட்கா, கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் தீமைகள், விளைவுகள் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் சமூக பிரச்சனைகளை  பற்றி மாணவ மற்றும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தும் அறிவுரை வழங்கியும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Comments