தர்மபுரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்து நடத்தப்படவேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சா திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் Evidenceparvai BREAKING TAMIL NEWS on March 03, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps [03/03/ 6:58 Pm தர்மபுரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் மாவட்ட சமூக நல அலுவலர் பதிவு செய்து நடத்தப்படவேண்டும் மாவட்ட சமூக நலத் துறையில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். முதியோர் நல சட்டம் 2007 மற்றும் 2009 இன் கீழ் பதிவு செய்யப்படும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் நல விதிகள் 2015 இன் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும் பதிவு செய்யாமல் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் கூடுதல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பதிவு செய்யாமல் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சா திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார் Comments
Comments
Post a Comment