டாக்டர் ராமதாஸ் பெருமிதம் கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை பா.ம.க. பெற்ற வெற்றி மகத்தானது
கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை பா.ம.க. பெற்ற வெற்றி மகத்தானது- டாக்டர் ராமதாஸ் பெருமிதம்-!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று
(22/02/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி கவுரவமான
வெற்றியைப் பெற்றிருக்கிறது. பேரூராட்சிகளில் 73 இடங்களிலும்,
நகராட்சிகளில் 48 இடங்களிலும் மாநகராட்சிகளில் 5 இடங்களிலும் வெற்றி
பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையாதப் பகுதிகளில், பாட்டாளி
மக்கள் கட்சி இன்னும் சில இடங்களைக் கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்
போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு
வாய்ப்பை இழந்தவர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காகக் கடுமையாக
உழைத்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த
வாக்காளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளாட்சிகள் தான் மக்களுக்கு நெருக்கமானவை;
உள்ளாட்சிகள் தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருபவை
ஆகும். உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடந்தால் தான் தமிழ்நாடும், இந்தியாவும்
முன்னேறும் என்பதாலும், ஜனநாயகம் தழைக்கும் என்பதாலும் பாட்டாளி மக்கள்
கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற வளர்ச்சிக்கான
செயல்திட்டங்களை முன்வைத்து போட்டியிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும்,
மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்த பாட்டாளி
மக்கள் கட்சிக்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது
அல்ல.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலமும்,
அதிகார பலமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
வெளியிடப்பட்டதிலிருந்தே அதிகார சுனாமி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது.
மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில் பணம் மூலம் தான்
வாக்குகள் வாங்கப்பட்டன.

Comments
Post a Comment