மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்|| Admission of students to AIIMS College, Madurai begins


 
 
மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு, இந்தாண்டு முதல் 50 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

கட்டுமான பணிகள் நடைபெறாததால், இந்த கல்லுாரியில் சேரும் மாணவர்கள், ராமநாதபுரத்தில் புதிதாக துவங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லுாரியில் படிக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 
இதைத் தொடர்ந்து, மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி, அகில இந்திய கவுன்சிலிங் மற்றும் நிகர்நிலை பல்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில், ஏழு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதம் 43 இடங்கள் காலியாக உள்ளன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகில இந்திய கவுன்சிலிங்கில், மாணவர்கள் கல்லுாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை, https://mcc.nic.in என்ற இணையதளத்தில் துவங்கியது. வரும், 21ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.
தமிழகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவுகள், 26ம் தேதி வெளியாகும். 
 
The AIIMS Medical College in Madurai has been given permission by the Central Government to conduct student admissions in 50 MBBS seats from this year.

As the construction work did not take place, the students joining the college were given permission by the Central Government to study at the newly started Government Medical College at Ramanathapuram.

Following this, the Central Medical Consultative Committee has been conducting All India Counseling and Direct University Medical Student Admissions.

Seven students are enrolled in the first phase of counseling at the AIIMS Medical College, Madurai. The remaining 43 seats are vacant.
Following this, in the second phase of All India Counseling, the process of selecting colleges for students started at https://mcc.nic.in. Coming up, counseling is going on until the 21st.

Students from Tamil Nadu and Kerala are expected to join the AIIMS Medical College, Madurai. The results of the second phase of counseling will be released on the 26th.

Comments