145 அடி உயர ஆத்தூர் முருகன் சிலைக்கு எப்ரல் 6 குடமுழுக்கு


சேலம்  ஆத்தூர்

145 அடி உயர ஆத்தூர் முருகன் சிலைக்கு எப்ரல் 6 குடமுழுக்கு


மலேசியாவில் உள்ள முருகன் கோவில் உயரம் 140 அடி உயரமாகும். புத்திரகவுண்டம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் முருகன் சிலை 145 அடி உயரம் கொண்டது.அறுபடை முருகன் கோவிலுள்ள மண் கொண்டு சிலை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் பணி தொடர்வதற்கு தனது தந்தையின் கனவும் சேலத்திற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வருகை  புரிந்து முருகனை வழிபடலாம் எனவும் 2016 மார்ச் 13 ல் தொடங்கிய இப்பணி தற்போது நிறைவுற்றுள்ளது. 2022 ஏப்ரல் 6 சிலை திறப்பு செய்து குடமுழுக்கு செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு அற்பணிக்கப்படும். கொரோனா  கட்டுப்பாடுகள் தொடர்வதனால் அதற்கான நடவடிக்கைகளுடன் குடமுழுக்கு செய்யப்படும். மேலம் பிரத்யேக வழிபாடுகள் , பூஜைகள் மற்றும் புனிதநீர் தெளிப்புகளுக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்று தொழிலதிபர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்...

                                                                               செய்தியாளர் சேலம் விஜி 

Comments