வேலூரில் ரேஷன் கடைகள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் மொத்தம் 122 கடைகள் உள்ளன. அவற்றை விரைவில் பிரித்து புதியதாக ரேசன் கடைகள் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேசன் கடைகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 801 ரேசன் கார்டுகள் உள்ளன. 4 லட்சத்து 43 ஆயிரத்து 375 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும். இதுவரை 96.92 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமி‌ஷனர் ராஜாராம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாவட்ட வழங்கல் துறை அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினார்.

ஆயிரம் காடுகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரித்து புதிய ரே‌ஷன் கடைகள் உருவாக்க வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் மொத்தம் 122 கடைகள் உள்ளன. அவற்றை விரைவில் பிரித்து புதியதாக ரேசன் கடைகள் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய கடைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு சரியாக திறக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பொருட்கள் தரமாக உள்ளதா சரியான அளவில் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Comments